கொழும்பு – யாழ். ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!
அந்தவகையில், வடக்கு தொடருந்து வழித்தடம் முழுமையாக சேவைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
‘யாழ் தேவி’ தொடருந்து சேவை இன்று முதல் கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையே வடக்கு தொடருந்து வழித்தடத்தில் மீண்டும் டிசம்பர் 24ஆம் திகதி முதல் சேவைகள் ஆரம்பமாகவுள்ளன..
அந்தவகையில், ‘யாழ் தேவி’ தொடருந்து சேவை குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் இயக்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பயணிகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் வழங்கப்படும் என்றும் இலங்கை தொடருந்து தெரிவித்துள்ளது.




