செய்திகள்

10 கோடி ரூபா பெறுமதியான ஹெரொயின் மாரவில பகுதி காட்டிலிருந்து மீட்பு

10 கோடி ரூபா பெறுமதியான ஒரு தொகை ஹெரொயின் மாரவில தொடுவாவ பிரதேசத்திலுள்ள கட்டுப்பகுதியிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து படகு மூலம் கொண்டுவரப்பட்டு குறித்த காட்டுப்பகுதியில் அது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கட்டுநாயக்க பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் அதனை மீட்டுள்ளனர்.

இவ்வாறாக 8கிலோவுக்கும் அதிக நிறையுடைய ஹெரொயின் மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.