செய்திகள்

10 தினங்களில் 698 பேருக்கு எதிராக யாழ்.நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

யாழ்.நகரப் பகுதியில் கடந்த 05 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான 10 நாட்கள் வீதிகளில் முறையற்ற விதத்தில் வாகனம் செலுத்திச் சென்ற 698 பேர் கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது வீதி விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய 564 பேர்,ஹெல்மட் இன்றி வாகனம் செலுத்திய 102 பேர், போதையில் வாகனம் செலுத்திய 21 பேர்,கவனயீனமாக வாகனம் செலுத்திய 8 பேர்,சிறு காயங்களை ஏற்படுத்திய இருவர், வீதி விபத்தை ஏற்படுத்திய ஒருவர் என்ற அடிப்படையில் 698 பேருக்கு எதிராகப் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருக்கும் எதிராக குற்றத்தின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

யாழ்.நகர் நிருபர்-