செய்திகள்

“10 நாட்களில் 10,000 கட்டில்கள் தயார்படுத்தப்படும்”: பசில் ராஜபக்ஷ

நாட்டில் 10 நாட்களுக்குள் பத்தாயிரம் கட்டில்கள் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்படும் என்று பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த பத்தாயிரம் கட்டில்களுக்கு மேலதிகமாக மாவட்ட மட்டத்தில் மேலதிக சிகிச்சை நிலையங்களை இனங்கண்டு அவற்றுக்கு தேவையான கட்டில்களும் உபகரணங்களும் வழங்கப்படும்.

இதன் பொறுப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவர்களுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
-(3)