செய்திகள்

10 நாட்களுக்கு நாட்டை முடக்குமாறு கோரிக்கை!

இலங்கையில் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென்று சுகாதார தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

3 நாட்களுக்கு நாட்டில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதால் எந்த பிரயோசமும் இல்லை.
இதனால் தொடர்ச்சியாக 10 நாட்களாவது பயணக்கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி அடுத்த வாரம் வெசாக் வாரம் என்பதனால் அதற்கு முன்னர் இருந்து 10 நாட்களுக்கு அந்த தடையை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-(3)