செய்திகள்

11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: கரன்னாகொட மீதான குற்றப்பத்திரம் நீக்கம்!

2008 ஆம் ஆண்டில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி வசன்த கரன்னாகொட மீதான குற்றப்பத்திரத்தை நீக்கிக்கொள்வதாக சட்டமா அதிபரினால் மேன்முறையீட்ட நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரமே இவ்வாறு நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி வசன்த கரன்னாகொடவும் தொடர்புபட்டுள்ளதாக அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனக்கு எதிராக செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தை வலுவிழக்கச் செய்யக் கோரி, வசன்த கரன்னாகொட ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இதன்படி அந்த மனு இன்று குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, அந்த  குற்றப்பத்திரத்தை நீக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
-(3)