செய்திகள்

11 பந்துகளில் 33 ஓட்டங்களை பெற்று மும்பாய் அணியை நிலைகுலைய வைத்த கௌதம்

இம்முறை ஐபீஎல்லில் விளையாடும் வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலம் இடம்பெற்றவேளை ராஜஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜொவ்ரா ஆச்சரை தெரிவு செய்தவேளை எவருக்கும் அது ஆச்சரியமளிக்கவில்லை- ஆச்சர் ஏற்கனவே தன்னை ரி20 வீரராக நிரூபித்திருந்தமையே இதற்கு காரணம்.
ஆனால் அதுவரை அறியப்படாத கே கவுதமை தெரிவு செய்தது குறித்து பலர் ஆச்சரியம் அடைந்தது உண்மை-கௌதமை பந்து வீச்சு சகலதுறை வீரர் என்ற பட்டியலிற்குள் அடக்கலாம்- அவர் துடுப்பெடுத்தாடக்கூடிய ஓவ்ஸ்பின்னர்
ஞாயிற்றுக்கிழமை மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரு வீரர்களும் தாங்கள் யார் என்பதை வெளிப்படுத்தினர்.
ஆச்சர் மிகச்சிறப்பாக பந்துவீசி 22 ஓட்டங்களை கொடுத்து மூன்று விக்கெட்களை வீழத்தினார். மும்பாய் அணியின் 19 வது ஓவரில் மூன்று விக்கெட்களும் வீழ்த்தப்பட்டாதால் அணியின் ஓட்ட எண்ணிக்கை பாதிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் ராஜஸ்தான் அணி வெற்றிபெறுவதற்கு 17 பந்துகளில் 43 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 8 வீரராக களமிறங்கிய கௌதம் 11 பந்துகளில் 33 ஓட்டங்களை பெற்று மும்பாய் அணியின் தோல்விக்கு காரணமானார்.
கௌதம் தான் எதிர்கொண்ட மூன்றாவது பந்தை லோங் ஒன்னிற்கு மேலாக சிக்சர் அடித்தார்- அடுத்த பந்து எட்ஜ்- நான்கு ஓட்டங்கள்- பந்து வீச்சாளர் முஸ்தபிகூர்.
அடுத்த ஓவரை பும்ரா வீசினார் ஆனால் அவரிடம் வழமையாக காணப்படும் துல்லிய தன்மையை காணமுடியவில்லை ஆச்சரும் கவுதம் இரண்டு நான்கு ஓட்டங்களை பெற்றனர். அதன் பின்னர் கவுதம் அந்த ஓவரில் மேலும் ஒரு நான்கு ஓட்டங்களை பெற்றார்.
இதன் காரணமாக ராஜஸ்தான் அணி பும்ராவின் அந்த ஓவரில் 18 ஓட்டங்களை பெற்றது.
இறுதி ஓவரில் 10 ஓட்டங்களை ராஜஸ்தான் பெறவேண்டிய நிலை காணப்பட்டது.
அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஆச்சர் ஆட்டமிழந்த போதிலும் கவுதம் பண்ட்யாவின் அடுத்த இரு பந்துகளில் அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
இதன் பின்னர் கருத்து தெரிவித்த கௌதம் அணித்தலைவர் ரகானே அடிக்கமுடியும் என நம்பு என என்னிடம் தெரிவித்தார் நான் நம்பினேன் அதன் காரணமாகவே அணியை வெற்றிக்கொண்டு செல்ல முடிநதது தெரிவித்துள்ளார்.
அணித்தலைவர் உட்பட அணியின் அனைவரும் என்னால் முடியும் என நம்புமாறு தெரிவித்தார்கள் என தெரிவித்துள்ள அவர் நான் இன்னும் சிறப்பாக துடுப்பெடுத்தாடவில்லை இதுவே சிறந்த துடுப்பாட்டத்திற்கான ஆரம்பமாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.