செய்திகள்

120 பேர் யாழ்ப்பாணத்தில் கைது! பொலிஸ் மா அதிபர் யாழ். விரைவு

புங்குடுதீவைச் சேர்ந்த உயர்தர மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையிட்டு இன்று புதன்கிழமை யாழ்.குடாநாடு தழுவிய ரீதியில் இடம்பெற்ற போராட்டங்கள், தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பயன்படுத்திய 50 க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் சைக்கிள்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளையில், நிலைமைகளையிட்டு நேரில் ஆராய்வதற்காக பொலிஸ் மா அதிபர் விசேட ஹெலிக்காப்’டலில யாழ். விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

01