செய்திகள்

எரிநட்சத்திரம் விழுந்ததால் பொலநறுவையில் நிலநடுக்கம்

எரிநட்சத்திரம் பூமியில்  விழுந்ததால் பொலநறுவையில் நிலநடுக்கம்

பொலனறுவை மாவட்டத்தின் பல பிரதேசங்களில், நேற்றிரவு 3 விநாடிகளுக்கு சிறியளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கிரிதலே, பகமுன, கதுருவெல மற்றும் தியபெதும ஆகிய பிரதேசங்களிலே இந்த அதிர்வு ஏற்பட்டதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று இரவு 8.30 முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. 2.8ரிச்டர்  பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வானிலிருந்து அதிக வெளிச்சத்துடன் பூமியை நோக்கி வந்த எரிநட்சத்திரம் ஒன்றினாலேயே இந்த அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது பூமிக்கு அருகில் வரும் போது வெடித்துச் சிதறியதாக அவர்கள் கூறி இருந்தனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீவியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன கூறியதாவது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் படி, பாரிய எரி நட்சத்திரம் ஒன்று பூமியில் வீழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக தெரிவித்தார்.