செய்திகள்

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட தாவடியைச் சேர்ந்த 40 வயது குடும்பஸ்தர் கைது

திருமண நிகழ்வொன்றுக்குக் கொழும்பு சென்ற யாழ்.ஓட்டுமடத்தைச் சேர்ந்த பெற்றோர் தமது மகளைத் தாவடியிலுள்ள தம் உறவினர்கள் வீட்டில் பாதுகாப்பாகத் தங்க வைத்து விட்டுச் சென்ற நிலையில் சிறுமியை 40 வயதுடைய குடும்பஸ்தரொருவர் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் மற்றும் அவரது இரு மகன்களையும் யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்றுக் கைது செய்திருந்தனர்.
சிறுமி வீட்டிலுள்ள செல்லப் பிராணிக்கு உணவு வைப்பதற்குச் சென்று வருவதை அவதானித்த குடும்பஸ்தர் சிறுமியைப் பின் தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளார்.சிறுமி சத்தம் போடவே சந்தேகநபர் ஓடித் தப்பியுள்ளார்.இது தொடர்பில் சிறுமி பெற்றோருக்குத் தெரியப்படுத்தவே பெற்றோர்கள் சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து இரு தரப்பும் மோதிக் கொண்டுள்ளதுடன் சிறுமியை வாளால் வெட்டிக் காயப்படுத்தியுமுள்ளனர்.சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணம் பொலிஸார் துஸ்பிரயோகத்துடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபரையும்,அவரின் இரு மகன்களையும் கைது செய்துள்ளனர்.
யாழ்.நகர் நிருபர்-