செய்திகள்

14 பேருக்கு பிணை !

யாழ்.நீதிமன்றக் கட்டடத்தொகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர் பில் கைது செய்யப்பட்டவர்களில் 14 பேருக்கு நேற்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளது.

14 பேரையும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணையில் செல்ல, யாழ் நீதவான் பொ.சிவகுமார் உத்தரவிட்டதுடன், மாணவர் ஒருவரை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்லவும் நீதவான் அனுமதியளித்தார்.

யாழ்.நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை, யாழ்.நகரப் பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் காண்காணிப்பகத்தை தாக்கியமை, வீதிகளில் ரயர் எரித்தமை மற்றும் வீதிச் சமிக்ஞை விளக்கை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் 130பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.