செய்திகள்

150 பயணிகளுடன் சென்ற விமானம் பிரான்ஸ்சில் மலையில் மோதிச் சிதறியது

ஸ்பெயினின் பார்சிலோனாவிலிருந்து 150 பயணிகளுடன் யேர்மன் நோக்கி பயணம் செய்த லுவ்தான்சாவுக்கு சொந்தமான போயிங் விமானம் பிரான்சின் தெற்கு பகுதியிலுள்ள மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

இதில் பயணம் செய்தவர்களில் 144 பேர் பயணிகள். ஏனையோர் விமான சிப்பந்திகள். விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும், ஆனால் அனைவரும் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொசிஸ் கொலண்ட் தெரிவித்துள்ளார்.

38,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென காலை 10.31மணிக்கும் 10. 40 மணிக்கும் இடையில் 7000 அடிக்கு தாழ்ந்ததாகவும் பின்னர் 11.20 மணிக்கு ராடார் திரையில் இருந்து மறைந்து போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் 45 பேர் ஸ்பானிஷ் பிரஜைகள் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=a29MlkSOTko” width=”500″ height=”300″]

1 2 3 4