செய்திகள்

சீனக் கெமிக்கல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து (காணொளி)

சீனாவில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் காட்சிகள் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன. அந்தக் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

சீனாவில் கிழக்குப்பகுதியான புஜியான் மகாணாத்தில் உள்ள சாங்சூ நகரத்தில் கெமிக்கல் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

பாராக்ஸிலின் என்ற கெமிக்கலைப் பயன்படுத்தி பொலியஸ்டர் பைபர் மற்றும் பிளாஸ்டிக் சாதனங்கள் இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இத் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், பல மீட்டர் உயரத்திற்கு தீப்பிழம்பு காணப்பட்டது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ தொழிற்சாலை முழுவதும் பரவியது. தீயை அணைக்கும் பணியில் 85 தீயணைப்பு வாகனங்களோடு, 430 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

பல மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. விபத்து நிகழ்ந்த நேரத்தில், தொழிலாளர்கள் யாருமில்லை என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.