செய்திகள்

18 மாதங்களில் 45 மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று

கடந்த 6மாத காலப்பகுதியில் நாட்டில் எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்கான 23 பாடசாலை மாணவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த வருடத்திலும் இதேபோன்று 22 மாணவர்கள் இனங்காணப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவ்வாறாக எச்.ஐ.விக்கு இலக்காகும் மாணவர் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து செல்வதாகவும் இதனால் பாடசாலை மாணவர்களுக்கு அது தொடர்பாக விழிப்புணர்வூட்டும் செயற்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த வருடத்தில் நாட்டில் எச்.ஐ.வி தொற்றுக்கு  இலக்கான மேலும் 100 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.