செய்திகள்

19ஆம் 20ஆம் திருத்தங்களை ஒரே நாளில் சமர்ப்பிக்க முயற்சி

சுதந்திரக்கட்சியினர் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் 19ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஆனால் அதற்குமுதல் தேர்தல் முறைமை சட்ட திருத்தத்தை 20ஆவது திருத்தமாக சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்த புதிய சிக்கலை தீர்க்க இரண்டு திருத்தச் சட்டங்களையும் ஒரே நாளில் சமர்ப்பிக்க ஆளும் தரப்பு முடிவெடுத்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி இரண்டு திருத்தச் சட்டமூலங்களும் சபையில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனினும் 19ஆவது திருத்தச்சட்டமூலத்தை சட்டமாக்குவதே முதல் நோக்கமாக அமையும் எனவும் தெரிகிறது.