செய்திகள்

19இல் ஊடகங்களை கட்டுப்படுத்தும் யோசனையும் உள்ளடக்கம் : ரஜிவ விஜேசிங்க

அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள 19வது அரசியலமைப்பு திருத்தத்தில் ஊடக நிறுவனங்கள் , ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவன பிரதானிகளை சட்டத்தின் முன் கொண்டு வரும் வகையிலான யோசனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் வந்த திருத்தத்தில் அரச அதிகாரிகள் மட்டுமே தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் அரசாங்கத்தின் கீழாக இருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் பின்னர் அதில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களும் உள்ளடக்கபபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.