செய்திகள்

19ஐ நிறைவேற்றும் நோக்கம் ஐ.தே.கவிடம் இல்லை : எதிர்க் கட்சித் தலைவர்

19வது திருத்தத்தை நிறைவேற்றக் கூடாது என்ற நோக்கத்திலேயே ஐக்கிய தேசிய கட்சி செயற்படுவதாக எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாங்கள் 19வது திருத்தத்தை ஒரு போதும் எதிர்க்கவில்லை முறையாக கொண்டு வரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம். உயர் நீதிமன்றம் இது தொடர்பாக தீர்ப்பினை வழங்கியுள்ளது. இதன்படி திருத்தங்கள் மெற்கொள்ளப்பட வேண்டும். இதனை விடுத்து முறையற்ற வகையிலான திருத்தத்தை அனுமதிக்கமாட்டோம்.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி 19ஐ நிறைவேற்றும் நோக்கம் இன்றி செயற்படுகின்றது. இதன்படி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பான விசாரணை விடயத்தை காட்டி பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்படுத்த முயற்சித்ததா? ஏன்ற சந்தேகமும் நிலவுகின்றது. என நிமல் சிறிபால தெரிவித்துள்ளார்.