செய்திகள்

19க்கான விவாதத்தை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்: 19இல் இருந்த ஊடக அழுத்த சரத்து நீக்கப்பட்டது

இன்று காலை பாராளுமன்றத்துக்க விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் 19வது திருத்தம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன்படி இன்றும் நாளையும் விவாதத்தை நடத்தி நாளை மாலை இதற்கான வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டள்ளது.
இதேவேளை 19 ஆவது அரசிலமைப்பு திருத்தத்தில் ஊடகங்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலான சரத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்ததே இந்த சரத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும்  எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஆரம்பத்தில் சமர்ப்பித்த சட்டமூலத்தில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்றும் பின்னர் மேற்கொண்ட திருத்தங்களிலே இந்த விடயம் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா சபையில் தெரிவித்துள்ளார்