செய்திகள்

19வது திருத்தத்தை ஆதரிக்க ஜாதிக ஹெல உறுமய தீர்மானம்

எதிர்வரும் 20ம் தகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 19வது அரசியலமைப்பு திருத்தத்தை ஆதரிப்பதற்கு ஜாதிக ஹெல உறுமய திர்மானித்துள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கமைய சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டிய சரத்துக்களை திருத்தத்திலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ள நிலையிலேயே அதனை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அதிகாரங்களை நீக்குவது தொடர்பான பிரச்சினைகளுக்கு நீதி மன்றம் தாம் எதிர்பார்த்ததை பொன்றவொரு தீர்ப்பையே வழங்கியுள்ளதாகவும் இதன்படி 20ம் திகதி அந்த திருத்தம் பாராளுமன்த்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் அதனை ஆதரிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அதிகாரங்களை நீக்குவது தொடர்பாக எதிர்ப்புகளை வெளியிட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த ஜாதிக ஹெல உறுமய 19வது திருத்தத்தை ஆதரிக்க மாட்டோம் என கடந்த சில வாரங்களாக கருத்துக்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.