செய்திகள்

19 ஆவது திருத்தம்: ஆராய்வதற்கு அமைச்சரவையின் அவசரக் கூட்டம் இன்று

பத்­தொன்­ப­தா­வது திருத்தச் சட்­டத்தை நாளை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்­பதா? இல்­லையா? என்­பது தொடர்பில் முடி­வெ­டுப்­ப­தற்­காக இன்று திங்­கட்­கி­ழமை அமைச்­ச­ரவை அவ­ச­ர­மாகக் கூட­வுள்­ளது.

பத்­தொன்­ப­தா­வது திருத்தச் சட்­டம் நாளை செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­ம் என சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க் ஷமன் கிரி­யெல்­ல­விடம் கேட்­ட­போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அமைச்சர் கிரி­யெல்ல மேலும் தெரி­விக்­கையில். கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறையை முற்­றாக ஒழிப்­ப­தற்­கா­கவே மக்கள் ஆணை வழங்­கினர்.

அதனை அரை­வா­சி­யாக குறைப்­ப­தற்கு ஆணை­கி­டைக்­க­வில்லை. ஐ.தே.கட்­சியும் ஜனா­தி­பதித் தேர்­தலில் இத­னையே பிர­சாரம் செய்­தது. எனவே ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்றார். இன்று நாம் வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை மீற முடி­யாது.

அதி­கா­ரங்­களை குறைப்­ப­தல்ல நிறை­வேற்று அதி­கா­ரத்தை முழு­மை­யாக ஒழித்து பாரா­ளு­மன்­றத்­திற்கு அதி­கா­ரங்­களை வழங்­கு­வதே எமது கொள்­கை­யாகும்.

இதற்­கா­கவே 19ஆவது திருத்­தத்தை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­வுள்ளோம்.இது தொடர்­பாக இறுதி முடி­வெ­டுப்­ப­தற்­காக இன்று திங்­கட்­கி­ழமை அமைச்­ச­ரவை அவ­ச­ர­மாகக் கூட­வுள்­ளது என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.