செய்திகள்

19 வது திருத்தத்தில் திருத்தம் மேற்கொள்ள சுதத்திரக் கட்சி தீர்மானம்

19வது அரசியலமைப்பு திருத்தத்தில் மேலும் திருத்தங்களை உள்ளடக்குவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
அடுத்த வாரமளவில் குறித்த திருத்தங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடுள்ளதாக அந்த கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பான பிரச்சினைக்கு எதிர்வரும் 7ம் திகதி சபாநாயகர் தீர்வினை முன்வைக்கவுள்ளதாகவும் இருப்பினும் அந்த பதவியில் மாற்றம் ஏற்படாது என நம்புவதாகவும் பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.