செய்திகள்

20 ஆவது திருத்தம் ஜனநாயகத்திற்கும் மனித உரிமைக்கும் சாவு மணி அடிக்கப் போகின்றது – நீதியரசர் விக்னேஸ்வரன் காட்டம்

20ஆவது திருத்தச் சட்டம் மூலம் ஜனநாயகத்திற்கும் மனித உரிமைக்கும் சாவு மணி அடிக்கப் போகின்றது.ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி ஆட்சி பண்புகளின் பரிணாமம் திசை மாறுவதற்கான காரணம் வெறுமனே பதவி மோகம் என்று மட்டும் நான் பார்க்கவில்லை.எனவே யார் யார் எல்லாம் இந்த 20ஆவது சட்ட திருத்தத்தை கொண்டு வருவதற்கு இன்று பாடுபடுகிறார்களோ, யார் யார் எல்லாம் இதற்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் இதே சட்ட திருத்தத்தை நீக்க வேண்டும் என்று வீதிகளில் இறங்கி போராடும் நிலை நிச்சயம் ஏற்படும் என்பதை நான் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன் என தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

20 ஆவது சட்டத்திருத்த பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் தம் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்கு மேற்கொண்டு வரும் ஜனநாயக ரீதியாக போராட்டங்களை மேற்கொள்வதற்கு காணப்படும் ஒரு சில ஜனநாயக இடைவெளிகளையும் அடைத்து இரும்புக் கரம் கொண்டு எமது போராட்டத்தை நசுக்குவதற்கான ஒரு நிகழ்ச்சி திட்டமும் 20 ஆவது திருத்த சட்டத்தின் பின்னால் இருப்பதாக உணர்வதாக அச்சம் வெளியிட்டார்.

யார் யார் எல்லாம் இந்த 20 ஆவது சட்ட திருத்தத்தை கொண்டு வருவதற்கு இன்று பாடுபடுகிறார்களோ, யார் யார் எல்லாம் இதற்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் இதே சட்ட திருத்தத்தை நீக்க வேண்டும் என்று வீதிகளில் இறங்கி போராடும் நிலை நிச்சயம் ஏற்படும் என்றும் கட்சி பேதம் இன்றி அனைவரும் ஒன்று சேர்ந்துஇந்த சட்ட திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.இந்த 20 ஆவது சட்ட திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட அனுமதிக்காதீர்கள். மனித உரிமைகள், ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் சமாதானம் ஆகியவற்றை நேசிக்கும் அனைவரும் எமக்கு இடையேயான கட்சி வேறுபாடுகளை மறந்து இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்படுவதை தடுக்கவேண்டும்.உங்கள் கண்களை உங்கள் விரல்களினாலேயே குத்தாதீர்கள்.

யார் யார் எல்லாம் இந்த 20 ஆவது சட்ட திருத்தத்தை கொண்டு வருவதற்கு இன்று பாடுபடுகிறார்களோ, யார் யார் எல்லாம் இதற்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் இதே சட்ட திருத்தத்தை நீக்க வேண்டும் என்று வீதிகளில் இறங்கி போராடும் நிலை நிச்சயம் ஏற்படும் என்பதை நான் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன். இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் கொண்டுவரும் இந்த சட்ட திருத்தும், உங்கள் மீதும், உங்கள் பிள்ளைகள் மற்றும் எதிர்கால உங்கள் சந்ததியினர் மீதும் ஒரு பூமராங் போல மாறும். உங்கள் கண்களை உங்கள் விரல்களினாலேயே குத்தாதீர்கள். இரண்டு தரப்பிலும் உள்ள எனதருமை சகாக்களே! இந்த 20 ஆவது சட்ட திருத்தம் நாளை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட அனுமதிக்காதீர்கள்.

மனித உரிமைகள், ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் சமாதானம் ஆகியவற்றை நேசிக்கும் அனைவரும் எமக்கு இடையேயான கட்சி வேறுபாடுகளை மறந்து இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றபப்டுவதை தடுக்கவேண்டும்.இந்த அரசு இன்னும் 6 மாதகாலத்தில் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கும் போது இத்தகைய ஒரு சட்ட திருத்தத்தை அவசரகதியில் கொண்டுவர முனைவதானது அவர்களுக்கு பின்னால் இருக்கும் இரகசிய நிகழ்ச்சி நிரல் ஒன்று இருப்பதையே தெட்டத் தெளிவாக காட்டுகின்றது.ஒரு உதாரணத்தை இனித் தருகின்றேன்.

குழுநிலை நேர திருத்தங்களின் போது நடைபெறப்போகும் 20வது திருத்தச்சட்டத் திருத்தங்கள் கணக்காளர் நாயகத்தின் அதிகாரங்களை கட்டுப்படுத்தவிருக்கின்றன. அரசாங்கம் அல்லாது அரச கூட்டுத்தாபனம் நூற்றிற்கு ஐம்பது சதவீதப் பங்குகளைக் கொண்டிருக்கும் கொம்பனிகள் கணக்காய்வுக்கு கணக்காளர் நாயகத்தால் உட்படுத்தப்பட வேண்டும் என்ற அரசியல் யாப்பில் ஏற்பாடுகள் வெளியேற்றப்படவிருக்கின்றன.

அப்படியானால் ஜனாதிபதியின் செயலகமும், பிரதம மந்திரியின் செயலாளரும் முன்னர் கணக்காளர் நாயகத்தின் ஆய்வில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து பின்னர் இருவரையும் குழுநிலை நேர திருத்தப்படி திரும்பவும் ஆய்வுக்கு உட்படுத்த விளைந்த காரணம் யாது? முக்கியமான கேள்வி என்னவென்றால் அரசாங்கத்தால் உரிமை கொண்டாடப்படும் கம்பனிகள் இதுவரை காலம் நடைபெற்ற கணக்காளர் ஆய்வில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளமையின் காரணம் யாது? என நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார் .(15)