செய்திகள்

20ஐ தோற்கடிக்க ரணில் , அனுர , ஹக்கீம் கூட்டு சதியில்: எதிர்க் கட்சி தலைவர்

20வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற விடாது இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க , ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநயக்க மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் ஒன்றிணைந்து  சூழ்சியொன்றை மேற்கொண்டுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

20வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னரே வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. இந்நிலையில் 20க்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கியவர்களே தற்போது அதனை எதிர்த்து கருத்து வெளியிடுகின்றனர். அதற்கு எதிரப்பு என்றால் எதற்கு அமைச்சரவையில் அதனை ஏற்றுக்கொண்டீர்கள் என கேட்கின்றேன்.

அமைச்சரவையில் விடயமொன்று நிறைவேற்றப்படுகின்றதென்றால் அதற்கு முழு அமைச்சரவையும் பொறுப்பாகும் யாரும் நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லையென கூற முடியாது. ஆனால் ரவூப் ஹக்கீமோ அதனை எதிர்ப்பதாக கூறுகின்றார். அப்படியென்றால் அவர் அமைச்சரவையிலிருந்து விலக வேண்டும்.

இந்நிலையில் ஜே.வி.பியும் அதனை எதிர்ப்பதாக கூறுகின்றது. உண்மையில் ரணில் விக்கிரமசிங்க , அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் ஒன்றிணைந்து சூழ்ச்சியொன்றை முன்னெடுத்து செல்கின்றனர். என்பது தெளிவாகின்றது. என நிமல் சிறிபால தெரிவித்துள்ளார்.