செய்திகள்

20ஐ நிறைவேற்றாது பாராளுமன்றத்தை கலைக்க விடமாட்டோம் : அதுரலிய ரத்தின தேரர்

புதிய தேர்தல் முறை திருத்தம் தொடர்பான 20வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றாது பாராளுமன்றத்தை கலைக்க விடமாட்டேன் என ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று பத்தரமுல்லை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
20வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றவேண்டியது கட்டாயமாகும். அதனை நிறைவேற்றும் வரை போராட்டங்களை முன்னெடுப்போம். எவ்வாறாயினும் அதனை நிறைவேற்றாது பாராளுமன்றத்தை கலைக்க விடமாட்டோம். என அவர் தெரிவித்துள்ளார்.