செய்திகள்

20ஐ நிறைவேற்றி புதிய முறைமையில் தேர்தலை நடத்துங்கள் : ஶ்ரீ.ல.சு.க ஜனாதிபதிக்கு கோரிக்கை

20வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமாகவிருந்தால்  எதிர்வரும் பொதுத் தேர்தலை புதிய தேர்தல் முறையில் நடத்துமாறு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யோசனை முன் வைத்துள்ளனர்.
இதேவேளை பழைய முறையிலேயே எதிர்வரும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சி அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும் ஜனாதிபதி இது வரை அது தொடர்பாக எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பழைய முறையிலேயே அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.