செய்திகள்

20வது திருத்தத்தை நிறைவேற்ற முடியாது , பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் : ஜனாதிபதியை வலியுறுத்த ஐ.தே.க தீர்மானம்

20வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு எனவும் இதனால் உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
100 நாட்களுக்காகவே மக்கள் ஆணை கிடைத்துள்ளது. இதனை இன்னும் 100 நாளைக்கு நீடித்து செல்வது அந்த ஆணையை மீறும் செயல். இந்நிலையில் 20வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பும் வேண்டும் ஆனால் அவர்கள் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்துள்ள நிலைமையில் அவர்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள முடியாது.
இதன்படி 20வது திருத்தம் நிறைவேற்றப்படுவதில் சந்தேகம். உள்ளது. இதனால் பாராளுமன்றத்தை கலைத்து உடனடியாக தேர்தலுக்கு செல்ல வேண்டுமென நாம் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளோம். என தெரிவித்துள்ளார்.