செய்திகள்

20வது திருத்தத்தை நிறைவேற்றிய பின்னரே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பார் : ராஜித சேனாரட்ன

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி இன்னும் தீர்மானிக்கவில்லையெனவும் 20வது திருத்தத்தை நிறைவேற்றிய பின்னரே அவர் பாராளுமன்றத்தை கலைப்பார் எனவும்  அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இன்று  அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இன்னும் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக தீர்மானிக்கவில்லை 20வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அவர் இருக்கின்றார். ஊடகங்கள்தான பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக செய்திகளை வெளியிட்டு வருகின்றது.20வது திருத்தம் சில வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கின்றோம். அத்துடன் யார் எதிர்த்தாலும்  இதனை  எம்மால் நிறைவேற்ற முடியும். என அவர் தெரிவித்துள்ளார்.