செய்திகள்

20வது திருத்தத்தை நிறைவேற்றும் வரை எமது போராட்டம் ஓயாது : எதிர்க் கட்சித் தலைவர்

19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அடுத்தாக 20வது திருத்தம் நிறைவேற்றப்படும் வரை தமது போராட்டங்கள் தொடரும் என எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார்.

19வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக எமது கட்சியினரே பாரிய பங்களிப்பை செய்துள்ளனர். எமது வாக்குகள் இன்றி அதனை நிறைவேற்றியிருக்க முடியாது. எவ்வாறாயினும் 19வது திருத்தத்தை எப்படி நிறைவேற்றினோமோ அதேபோல் 20வது திருத்தமான தேர்தல் திருத்தத்தையும் நிறைவேற்றுவோம் அதுவரை எமது போராட்டம் ஓயாது. என தெரவித்துள்ளார்.