செய்திகள்

20வது திருத்தமாக தேர்தல் முறை திருத்தம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்: பிரதமர் ரணில் தெரிவிப்பு

20 வது அரசியலமைப்பு திருத்தமாக தேர்தல் முறை திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த மாதத்திற்குள் அந்த திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ கொத்தாவில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தள்ளார்.
20 வது திருத்தத்தினுடாக புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தும் வகையில் தேர்தல் முறை திருத்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் இதனை இம் மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.