செய்திகள்

20வது திருத்தம் வர்த்தமானியில் வெளியானது

தேர்தல் முறை திருத்தமான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நேற்றிரவு வர்த்தமானியூடாக வெளியிடப்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்புத் திருத்தத்தின் ஆங்கில பதிப்பை அச்சிடும் பணிகள் நேற்றிரவு நிறைவுபெற்று அது வெளியிடப்பட்டுள்ளதுடன் தமிழ் மற்றும் சிங்கள பதிப்புக்களை அச்சிடும் பணிகள் இன்று அதிகாலை ஆரம்பிக்கப்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
237 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதிய தேர்தல் முறைமைக்கு கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவை  அங்கீகாரம் வழங்கியிருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.