செய்திகள்

20வது திருத்த விடயத்தில் அரசாங்கம் மற்றைய கட்சிகளின் யோசனைகளை கணக்கிலெடுக்கவில்லை : ஜே.வி.பி குற்றச்சாட்டு

20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகள் முன்வைத்த யோசனைகளை கணக்கிலெடுக்காது அமைச்சரவையில் வேறு யோசனையோன்றே நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளார்.
இன்று பத்தரமுல்லையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத்தே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளிடம் இணங்கிய யோசனைக்கு வேறாக வேறு யேசனையை சட்டமாக கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் நிலவுகின்றது.இது பிரச்சினைக்குறிய விடயமே. இந்நிலையில் சகல கட்சிகளின் யோசனைகளையும் பெற்று எந்தவொரு பிரிவு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சகல கட்சிகளிடமும் இணங்கிய விடயங்களுக்கமைய 20வது திருத்தம்அமைய வேண்டும் என அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுக்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.