செய்திகள்

20வது தொடர்பான விவாதத்தை 23ம் திகதி ஆரம்பிக்க அரசாங்கம் திட்டம்

23ம் திகதி  20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அரசாங்கம் இந்த விடயத்;தை தெரிவிக்கவுள்ளதாக தெரிய வருகின்றது.
வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியதும் அவசர விடயமாக கருதி உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை பெற்று 23ம் திகதி விவாதத்தை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.