செய்திகள்

20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபில் அரசாங்கம் செய்யவுள்ள திருத்தங்கள்

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பாக நாளையும் நாளை மறுதினமும் பாராளுமன்றத்தில் இருநாள் விவாதங்கள் நடத்தப்படவுள்ளன.

நாளை மறுதினம் மாலை விவாதம் முடிவடைந்த பின்னர் நடக்கவுள்ள குழுநிலையின் போது அரசாங்கம் முன்வைக்கவுள்ள 20 ஆவது திருத்த வரைபில் செய்யப்படும் திருத்தங்களட தொடர்பாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளன.
இருபதாவது திருத்தச் சட்டம் தொடர்பான சட்டமூலம் அரச வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் 2020 செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
குறித்த திருத்தச் சட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்மானங்களைக் கருத்தில் கொண்டு சட்டமூலம் தொடர்பான பாராளுமன்றக் குழுநிலை விவாதத்தின் போது சமர்ப்பிக்கப்படவுள்ள முன்மொழிவுகள் நீதி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், கீழ்க்குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பான ஏற்பாடுகள் இருபதாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பாக குழுவிவாதத்தின் போது சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென இவ் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
• உயர் நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களிலும் தேங்கியுள்ள அதிகமான வழக்குகளைக் கருத்தில் கொண்டு குறித்த நீதிமன்றங்களில் நீதவான்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள்
• தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த நிலைமைகளின் போது மேலெழும் விடயங்களுக்கமைவான சட்டங்கள் மாத்திரம் அவசரச் சட்டங்களாகக் கருதப்பட்டு பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள்
• அரச கூட்டுத்தாபனங்கள் அல்லது அரசாங்கத்தால் அல்லது கூட்டுத்தாபனங்களால் 50% விழுக்காடு பங்குகள் அல்லது அதற்கு அதிகமான பங்குகளைக் கொண்ட கம்பனிகளைக் கணக்காய்வு செய்யும் அதிகாரம் கண்காய்வாளர் நாயகம் அவர்களுக்கு வழங்கும் வகையிலான ஏற்பாடுகள்
• அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கை, அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்களின் எண்ணிக்கை மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை தீர்மானிப்பதற்கான 19 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே 20 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்வாங்கல் ஆகிய திருத்தங்கள் முன்வைக்கப்படவுள்ளன.

-(3)