செய்திகள்

’20’ கூட்­ட­மைப்­புக்குப் பாத­க­மில்லா விட்­டாலும் சிறிய, சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கு பாதிப்பு: சுமந்­திரன்

உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ள­தான புதிய தேர் தல் முறை­மை­யு­ட­னான 20 ஆவது திருத்­த­மா­னது தமிழ்த் தேசி­யக் ­கூட்­ட­மைப்­புக்கு பாத­க­மாக அமை­யா­விட்­டாலும் கூட ஏனைய சிறிய, சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்கு பாத­க­மாக அமை­வ­தா­லேயே புதிய தேர்தல் முறையை நாம் எதிர்க்­கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.ஏ. சுமந்­திரன் நேற்று சபையில் தெரி­வித்தார்.

பொதுத் தேர்தல் ஒன்று இடம்­பெ­ற­வி­ருக்­கின்ற நிலையில் அவ­சர அவ­ச­ரமாக புதிய தேர்தல் முறை­யொன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு முற்­ப­டு­கின்ற செயற்­பா­டா­னாது கட்­சிக்கு சாத­க­மா­ன­தாக அமை­யுமே தவிர நாட்­டுக்கோ, மக்­க­ளுக்கோ நன்­மை­ய­ளிக்­கப்­போ­வ­தில்லை. எனவே இவ்­வா­றான அவ­சர தீர்­மானம் தவ­றா­னது என்­பதே எமது நிலைப்­பா­டாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்றுப் புதன்கிழமை இரண்­டா­வது நாளா­கவும் இடம்­பெற்ற புதிய தேர்தல் முறைமை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளைப் பிரே­ரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். சுமந்­திரன் எம்.பி. இங்கு மேலும் கூறு­கையில்,

பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு தேர்தல் ஒன்று நடை­பெ­ற­வி­ருக்­கின்ற நிலையில் அவ­சர அவ­ச­ர­மாக புதிய தேர்தல் முறை­யொன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு முற்­ப­டு­வ­தா­னது ஏற்றுக் கொள்ள முடி­யா­த­தா கும். இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற புதிய தேர்தல் முறை­மை­யா­னது கட்­சி­களின் நலன் கரு­தி­ய­தாக இருக்­குமே தவிர அது மக்கள் சார்­பா­ன­தா­கவோ அல்­லது நாட்டின் நலன் சார்ந்­த­தா­கவோ இருக்­காது. தற்­போது அமுலில் இருக்­கின்­ற­தான விருப்பு வாக்­கு­மு­றை­மையே ஜன­நா­யகம் நிறைந்த வாக்­க­ளிப்பு முறை­மை­யாகும். மக்­களும் இதனை ஏற்­றுக்கு கொள்­கின்­றனர். மக்­களின் விருப்­புக்கு ஏற்­ற­வ­கையில் இப்­போ­துள்ள தேர்தல் முறை­மையில் பிர­தி­நி­தி­களின் தெரி­வுகள் இடம்­பெ­று­கின்­றன.

தற்­போது உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் ஒரு­வி­தத்­திலும் மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் இன்­னொ­ரு­வி­தத்­திலும் இடம்­பெ­று­கின்ற நிலையில் புதிய தேர்தல் முறைமை அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­மாயின் பாரா­ளு­மன்ற தேர்தல் பிறி­தொரு முறையில் நடத்­தப்­படும். அப்­ப­டி­யானால் மூன்று தேர்­தல்­களும் மூன்று வித­மா­கவே நடத்­தப்­படும். அப்­படி இல்­லாது எல்லாத் தேர்­தல்­களும் ஒரே முறை­மையின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். அதற்­கேற்ற வகை­யி­லேயே மாற்­றங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

தற்­போது இங்கு அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு முற்­ப­டு­கின்ற கலப்பு முறைத் தேர் தல் முறை­மை­யா­னது உலகில் எங்கும் காணப்­ப­ட­வில்லை. புதிய தேர்தல் முறை­மை­யா­னது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாதகமாக அமையாது என்கின்ற போதிலும் ஏனைய சிறு மற்றும் சிறுபான்மைக்கட்சிகளுக்கு பாதகமானது என்பதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்புதிய தேர்தல் முறைமையை எதிர்க்கின்றது. புதிய தேர்தல் முறை கொண்டுவரப்ப டும் பட்சத்தில் அது ஜனநாயகம் நிறைந்த தாக இருத்தல் வேண்டும் என்றார்.