செய்திகள்

20 தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை நாம் எதிர்ப்போம் : எதிர்க் கட்சி தலைவர்

20வது திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணையானது 20ஐ நிறைவேற்ற விடாது தாமதப்படுத்தும் திட்டத்தின் ஓர் அங்கமே எனவும் இதனால் அதனை தாம் எதிர்ப்போம் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று மாலை கொழும்பில் எதிர்க் கட்சி தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறித்த தீர்மானத்துக்கு எதிர்ப்பை வெளியிட்ட நாம் நாளைய தினமும் அதற்கு எதிர்ப்பை வெளியிடுவோம்.இதன்படி நாளை சபாநாயகரை சந்தித்து இது தொடர்பாக தெரிவிப்போம். எவ்வாறாயினும் குறித்த பிரேரணை தொடர்பான விவாதத்தில் நாம் கலந்துக்கொள்வோம். என அவர் அந்த ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.