செய்திகள்

20 தொடர்பான தனது நிலைப்பாட்டை பிரதமர் நாளை சபையில் அறிவிப்பார்

20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டை நாளைய தஜனம் பாராளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்கவுள்ளார்.
நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தின் போது சபை ஒத்தி வைப்பு பிரேணையின் போது அவர் 20 தொடர்பான தனது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
20வது திருத்தம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் செயற்கு கூட்டத்தில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளும் அவரை சந்தித்து அவர்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளனர். இந்நிலையில் அவர் தனது நிலைப்பாட்டை நாளை அறிவிக்க தீர்மானித்துள்ளார்.