செய்திகள்

20 பேர்ச் காணியுடன் சொந்த வீடு வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம்

காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு அமைப்பு, தேசிய சமாதான பேரவை ஆகியோரின் ஏற்பாட்டில் பொருளாதாரத்தின் முதுகெழும்பான மலையக சமூகத்தினருக்கு 20 பேர்ச் காணியுடன் சொந்த வீடு வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று 31.05.2015 அன்று பிற்பகல் அட்டனில் இடம்பெற்றது.

மலையக மக்கள் சுதந்திரமாக குடியிருப்பதற்கு 20 பேர்ச் காணியும் காணி உரித்துடன் விவசாய நடவடிக்கைகளுக்காக 2 ஏக்கர் காணியும் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த போராட்டம் இடம்பெற்றதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

 அத்தோடு 200 வருட வாழ்க்கையில் எப்போது காணி, நிரந்தர காணி உரிமையுடன் வாழ்வது ? அரசே பொறுப்பு கூறு, சுய தொழிலை மேற்கொள்வதற்கு ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கர் காணி வழங்கு, நச்சுத்தன்மை இல்லாத விவசாயத்தை உற்பத்தி செய்வோம், தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தவிர்ப்போம் என பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

 இந்த ஆரப்பாட்ட பேரணி அட்டன் டிக்கோயா நகர சபையில் ஆரம்பிக்கபட்டு அட்டன் பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் நகரசபைக்கு வந்தடைந்ததும் அங்கு அட்டன் நகரசபை மண்டபத்தில் பொதுக்கூட்டம் இடம்பெப்றது.

DSC09699 IMG_2034