செய்திகள்

20 வது திருத்தத்தையும் முன்வைக்கக்கோருவது நியாயமற்றது: ஜே.வி.பி. கடும் எதிர்ப்பு

19வது திருத்தச்சட்டமூலத்தையும், தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20வது திருத்தச்சட்ட மூலத்தையும் ஒன்றாக நிறைவேற்ற வேண்டும் என முன்வைக்கப்படும் தர்க்கம் நியாயமற்றது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

இரண்டு திருத்தச்சட்டமூலங்களும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்ட வையென்பதால் அவற்றை ஒன்றாக நிறைவேற்றவேண்டிய தேவையில்லை யென ஜே.வி.பியின் ஊடக செய லாளர் விஜித ஹேரத் தினகரனுக்குத் தெரிவித்தார்.

19வது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கவேண்டுமாயின் தேர்தல் முறையை மாற்றும் 20வது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்ற த்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என சுதந்திரக் கட்சியின் பாராளு மன்றக் குழுக் கூட்டத்தில் வலியுறுத் தப்பட்டிருந்தது. அவர்களின் இந்த தர்க்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

தற்பொழுது முன்வைக்கப்பட்டிருக்கும் 19வது திருத்தச்சட்டமூலத்தில் நிறைவேற்று அதிகாரம் முழுமையாக நீக்கப்படவில்லை. சில அதிகாரங்கள் மாத்திரம் மாற்றப்பட்டுள்ளன.

நிறைவேற்று அதிகாரம் முழுமையாக மாற்றப்பட்டி ருந்தால் தேர்தல் முறைமாற்றம் தொடர்பான அரசியலமைப்புத் திருத்தத்தையும் ஒன்றாக நிறைவேற்றுமாறு கோர முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே நிறைவேற்று அதிகாரம் முழுமையாக ஒழிக்காதபடியால் தேர்தல் முறைமாற்றத்தை ஒன்றாகக் கொண்டுவரவேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதற்காக குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் 19வது திருத்தச்சட்டமூலத் துக்கு ஆதரவு வழங்காமல் அதனைத் தோற்கடித்தால் அவ்வாறு செயற்பட்ட வர்கள் குறித்து நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்துவோம். மக்கள் நீதிமன்றத்திடம் செல்லவிருப்பதாக வும் அவர் விஜித ஹேரத் எம்பி சுட்டிக் காட்டினார்.

தற்பொழுது இருக்கும் நிலையில் 19வது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப் பட்டாலும், நிறைவேற்றப்படாவிட்டாலும் பாராளுமன்றம் கலைக்கப்படும் சூழலே காணப்படுகிறது. இருந்தபோதும் ஜனாதிபதியின் கைகளிலேயே எல்லாம் அடங்கியிருப்பதாகவும் ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.