செய்திகள்

20 வது திருத்தம் குறித்து இன்று நாளையும் பாராளுமன்றத்தில் விவாதம்

இரு­ப­தா­வது திருத்தம் தொடர்­பாக இன்று செவ்­வாய்க்­கி­ழ­மையும் நாளை புதன்­கி­ழ­மையும் இரண்டு நாள் சபை ஒத்­தி­வைப்பு விவாதம் பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெ­ற­வுள்­ள­தாக சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷமன் கிரியெல்ல தெரி­வித்தார்.

இது தொடர்பில் நேற்று திங்­கட்­கி­ழமை சபாநாயகர் சமல் ராஜபக் ஷ தலைமையில் இடம்­பெற்ற கட்­சித்­த­லை­வர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்­பட்­ட­தா­கவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இது தொடர்­பாக அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல மேலும் தெரி­விக்­கையில்:

“இரு­ப­தா­வது திருத்தம் தொடர்­பாக கட்­சித்­த­லை­வர்கள் கூட்டம் நேற்று நடை­பெற்­றது. இதன்­போது புதிய தேர்தல் முறை மாற்றம் தொடர்பிலான 20 ஆவது திருத்­தத்­தினால் சிறு­பான்மை இன கட்­சிகள் மற்றும் சிறிய கட்­சி­க­ளுக்கு அநீதி இழைக்கப்­ப­டு­வ­தாக அக்­கட்­சிகள் தமது எதிர்ப்பை வெளி­யிட்­டுள்ள சூழ் நிலையில் இன்று கூடும் பாரா­ளு­மன் றக் கூட்­டத்­தொ­டரில் 20ஆவது திருத்தம் தொடர்­பான ஒத்­தி­வைப்பு விவாதத்தை இரண்டு தினங்கள் நடத்­து­வ­தற்கு இணக்கம் காணப் ­பட்­டது.

அரச தரப்பில் இந்த யோசனை முன்­வைக்­கப்­பட்­டது. இதற்கு தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­ மைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், டக் ளஸ் தேவா­னந்தாவின் தலைமையிலான ஈ.பி.டி.பி, வாசு­தேவ நாண­யக்­கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் விருப்பத்தை தெரிவித்தன. எதிர்க்­கட்­சித்­த­லைவர் நிமால் சிறி­பால டி சில்வா மட்டும் இவ்­வி­வா­தத்­திற்கு தனது எதிர்ப்பை தெரி­வித்தார். இதற்­க­மைய இன்றும் நாளையும் 20 ஆவது திருத்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இரண்டு நாள் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்” என்றார்.

இதேவேளை, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அண்மையில் வெ ளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வெ ளியிட்ட கருத்து தொடர்பிலும் விவாதம் நடத்தப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இது குறித்த விவாதத்தையும் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.