செய்திகள்

2012 இல் வெலிக்கடை கைதிகள் தலையில் சுட்டு கொல்லப்பட்டனர்

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு, வெலிகட சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது பாதுகாப்பு படை அணியொன்று சிறைக் கைதிகளை தலையிலும் நெஞ்சுப்பகுதியிலும் சுட்டு படுகொலை செய்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தாம் இதை நேரில் கண்டதாக அச் சந்தர்ப்பத்தில் வெலிகட சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியாக இருந்த புகையிரத ஊழியர் கூட்டமைப்பின் செயலாளர் சுதே~; நந்திமால் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் உயர் அதிகாரியொருவர் கொண்டு வந்த பெயர் பட்டியலுக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட கைதிகள் நிர்வாணமாக்கப்பட்டு சுவரில் சாய்த்து வைக்கப்பட்டு சிறைச்சாலைகளின் முன்னாள் ஆணையாளர் நாயகம் கொடிப்பிலி முன்னிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.