செய்திகள்

2015 ஐ.பில் கிண்ணத்தை கைப்பற்றியது மும்பாய் இந்தியன்ஸ்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை 41 ஓட்டங்களால் தோற்கடித்து மும்பாய் இந்தியன்ஸ் அணி 2015 ஐ.பில் சம்பியனாகியுள்ளது.
வெற்றிபெறுவதற்கு 203 என்ற மிகக்கடினமான இலக்கை துரத்திய சென்னை அணியினால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது. சென்னை அணிசார்பில் ஸ்மித் 48 பந்துகளில் 57 ஓட்டங்களை பெற்றார். சுரேஸ் ரெய்னா 28 ஓட்டங்களையும் டோனி18 ஓட்டங்களையும் பெற்றனர்.
9 பந்துகள் சந்தித்த ஹசி 4 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து ரெய்னா களம் இறங்கினார்.ரெய்னாவும் சுமித்தும் களத்தில் நீண்ட நேரம் நின்றார்கள். ஆனால் அவர்களால் அதிரடியாக விளையாட முடியவில்லை. மும்பை அணியின் வேகப்பந்து வீச்சு அபாரமாக இருந்தது. 11-வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சுமித் அரை சதத்தை கடந்தார்.

214125

12-வது ஓவரை ஹர்பஜன் சிங் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் சுமித் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். அவர் 48 பந்தில் 57 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து சென்னை அணி அணித்தலைவர்தோனி களம் இறங்கினார். ஹர்பஜன் சிங் வீசிய 14-வது ஓவரில் ரெய்னா ஸ்டம்பிங் ஆகி ஆட்டமிழந்தார் அவர் 19 பந்தில் 28 ஓட்டங்களை எடுத்தார். ரெய்னா ஆட்டமிழந்ததும் சென்னை அணியின் தோல்வி உறுதியானது.

அடுத்து வந்த பிராவோ 9 பின்னர் தோனி (18) டு பிளிசிஸ் (1) நெஹி (3) அஸ்வின் (2) என ஆட்டமிழக்க சென்னை அணியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை அணி சென்னையை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

பந்து வீச்சில் மக்கிளனெகன் 3 விக்கட்களையும், மலிங்க 2 இரண்டுவிக்கெட்களையும் கைப்பற்றினர்.
முன்னதாக நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பை சென்னை தெரிவுசெய்திருந்தது.
மும்பாய் அணி ஆரம்பத்திலேயே பார்த்தீவ் பட்டீலை ரன்அவுட் முறையில் இழந்தபோதிலும்,சிம்மன்ஸ், ரோகித் சர்மா இருவரினதும் அதிரடி துடுப்பாட்டம் காரணமாக பலமான நிலையயை எட்டியது.இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 119 ஓட்டங்களை சேர்த்தனர். சிம்மன்ஸ் 68 ஓட்டங்களையும், ரோகித்சர்மா 50 ஓட்டங்களையும் பெற்ற அதேவேளை ராயுடு மற்றும் பொலாட்டும் தலா 36 ஓட்டங்களை பெற்று அணி 200 ஓட்டங்களுக்கு மேல் பெற உதவினர்