செய்திகள்

2015 ஐ.பி.எல்லில் வென்றவர்கள் யார்? தோற்றவர்கள் யார்? ஏன் வென்றார்கள் ? ஏன் தோற்றார்கள்?

அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியை தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் வெற்றி வாகை சூடியது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

நீங்கள் எலோரும் கண்டு ரசித்தபடி இவ்வாண்டுத் தொடர் இறுக்கமான முடிவுகள், பதற்றம், விளாசல்கள் , ஏமாற்றம், வேடிக்கை , கவர்ச்சி என்று கிரிக்கட் ஆட்டத்தின் பல்வேறு அம்சங்களையும் கொண்டிருந்தது.

சில துடுப்பட்டக்காரர்கள் எதிர்பார்ப்புக்கு மேலாக அபாரமாக விளையாடினர், சில நட்சத்திர வீரர்கள் ஏமாற்றமளித்னர், சில வெளிநாட்டு வீரர்கள் சொதப்பினர்.

இந்தப் போட்டித் தொடரிலே வென்றவர்கள் யார் என்று கேட்டால் ‘மும்பை இந்தியன்ஸ்’ என்று எல்லோருமே சொல்லிவிடுவீர்கள். ஆனாலும், வேறுபலரையும் இந்தத் தொடரிலே வென்றவர்கள் என்றும் தோற்றவர்கள் என்றும் அடையாளப்படுத்த முடியும்.

அவர்கள் யார், எதற்காக அவர்கள் வென்றார்கள் , எதற்காக அவர்கள் தோற்றார்கள் என்று அறிய விரும்புகிறீர்களா? கீழே பாருங்கள்.

1

சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இந்திய அணிக்காக விளையாடி இரண்டு வருடங்களாகி விட்டன. இவ்வாறன நிலையில் இம்முறை ஐ.பி.எல்.லில் அவர் சிறப்பாக விளையாடியதன் காரணமாகவே பங்களாதேஸ் செல்லும் இந்திய அணியில் அவர் இடம்பிடித்தார்.34 வயது ஓவ் ஸ்பின்னர் 24.77 என்ற சராசரியில் 18 விக்கட்களையும் வீழ்த்தினார்.இது தெரிவுக்குழுவினரை மகிழ்ச்சியடைய வைக்ககூடிய சிறந்த பெறுபேறாகும். மும்பாய் அணி சம்பியனான பின்னர் கருத்து தெரிவித்த ஹர்பஜன், சர்வேதச போட்டிகளில் மீண்டும் விளையாடவேண்டும், இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க வேண்டும் என்பது குறித்து தான் எவ்வளவு ஆசைகொண்டிருந்தேன் என்பதை தெரிவித்தார்.எனக்கு வயதாகிவிட்டது என நான் கருதவில்லை. நான் மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடுகிறேன். இது குறித்து நான் மகிழ்ச்சியாகவுள்ளேன் என குறிப்பிட்டார்.அவரது இந்த நம்பிக்கைகள் உண்மையானவையாக ஏற்றுக்கொள்ள கூடியவையாக காணப்படுகின்றன.

2

இந்திய முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங்கினை 3.31 மில்லியனிற்கு வாங்கிய டெல்கி அணி அந்த பணத்தை அவர் மீளசெலுத்த வேண்டும் என கேட்டால் அது சரியான விடயமே. இவ்வருட ஐ.பி.எல்லில் 14 போட்டிகளில் விளையாடிய அவர் இரு தடவைகளே 50 ஓட்டங்களை எடுத்தார். கடந்த காலங்களில் அவர் ஐ.பி.எல்.லில் எவ்வாறு விளையாடினார் என்பதை டெல்கி அணியினர் பரிசீலித்திருந்தால் அவர் ஒரு சீசனில் கூட 400 ஓட்டங்களை பெறாததை அவர்கள் உணர்ந்திருப்பர்.

3

இவ்வாறான போட்டிகளில் லெக் ஸ்பின்னர் ஓருவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை யுவேந்திர சஹால் மீண்டும் நிரூபித்தார்.அவரது ஓரு ஓவரிற்கான ஓட்டங்களை வழங்கும் வீதம் 8.86. ஆனால் அவர் 23 விக்கெட்களை வீழத்தியதே முக்கியமானது.12 பந்துகளுக்கு ஓரு முறை அவர் விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.  இது இம்முறை ஐ.பி.எல் சாதனைகளில் ஓன்று. பெங்களுர் அணிக்காக விளையாடிய இந்த வீரர் சிறியவயதில் செஸ் விளையாடியவர். இவர் இந்திய அணிக்காக தெரிவாகும் வாய்ப்பும் அதிகமாகவுள்ளது.

4

உலகின் தற்போதைய தலைசிறந்த பந்துவீச்சாளர் ஸ்டெயின் என்பதே பரவலான கருத்து. தற்போது இது குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலக கோப்பையில் அவர் சிறப்பாக விளையாவில்லை. அதே நிலை ஐ.பி.எல்.லில் காணப்பட்டது. ஸ்டெயின் 6 போட்டிகளில் மாத்திரம் விளையாடி 56.6 என்ற சராசரியுடன் மூன்று விக்கெட்களை மாத்திரம் வீழ்த்தினார்.ஓரு ஓவரிற்கு 8.94 ஓட்டத்தினையும் விட்டுக்கொடுத்தார். இந்த வருடம் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட பல பிரபல வீரர்கள் சோபிக்கவில்லை.  அதில் ஸ்டெயின் பிரதானமானவர்.

8

உலககிண்ணத்தை வெற்றிபெற்ற கையுடன் இவ்வருட ஐ.பி. எல் போட்டிகளில் ஆட வந்த மக்ஸ்வெல், ஜோன்சன், அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லி போன்றவர்கள் பஞ்சாப் அணி கிண்ணத்தை கைப்பற்ற உதவுவார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. எனினும் இவர்கள் மூவரும் அணியை கைவிட்டனர். 36 இனிங்ஸ்களில் இவர்களால் 516 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.பெய்லி மாத்திரமே ஓரளவு சிறப்பாக விளையாடினார். ஆனால் அவரது சராசரியும் 23.54 ஆகவே காணப்பட்டது. ஜோன்சனும் பந்துவீச்சில் ஏமாற்றம் அளித்தார். ஒன்பது விக்கெட்களை மாத்திரம் பெற்றார்.ஓரு ஓவரிற்கு 9 ஓட்டங்களை சாராசரியாக வழங்கினார். மக்ஸ்வெலின் அதிகூடிய ஓட்டம் 43,சராசரி 18.13, இரு விக்கெட்களை மாத்திரம் அவர் வீழ்த்தினார். வெளிநாட்டு வீரர்கள் இவ்வாறான நிலையில் காணப்பட்டதால் பஞ்சாப் அணியால் சோபிக்க முடியாதது ஆச்சரியமளிக்கவில்லை.

 

7

இந்த வருட ஐ.பி.எல் ஆரம்பமாவதற்கு முன்னர் மும்பாய் இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் ரிக்கி பொன்டிங் எதிரணி மீது தாக்குதலை மேற்கொள்வது குறித்து சுட்டிக்காட்டியிருந்தார். இருபதிற்கு இருபது என்பது எப்போதும் சாதகமான அணுகுமுறையை பின்பற்றுவது தொடர்பானது. எதிரணி தவறுவிடுவதற்காக காத்திருக்க முடியாது. நாங்களே எங்களுக்கு சாதகமான நிலையை உருவாக்க முயலவேண்டும்,என அவர் தெரிவித்திருந்தார். அணி தனது முதல் நான்கு போட்டிகளையும் தோற்றபோதிலும் அவர் இந்த அணுகுமுறையை தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தார். அந்த அணுகுமுறை பாரிய மாற்றத்தை அணியில் ஏற்படுத்தியது அவர்கள் சம்பியானானர்கள்.

6

பெங்களுர் அணியில் உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருருவரான அவுஸ்திரேலியாவின் மிட்ச்செல் ஸ்டார்க், உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் ஏபி. டிவிலியர்ஸ், ஐபிஎல் வரலாற்றிலேயே ஆகக்கூடிய ஓட்டங்களை பெற்ற கிறிஸ் கெயில், இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட்கோலி போன்றவர்கள் இடம்பெற்றிருந்த போதிலும் அந்த அணியால் இறுதிபோட்டிக்கு தகுதிபெற முடியவில்லை. இந்தவருடம் இந்த நால்வரும் அவ்வப்போது தங்கள் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தினாலும்,அவர்களால் மிகமுக்கிய மான போட்டியில் அணியை வெற்றிபெறச்செய்ய முடியவில்லை. அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர வீரர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது இது ஏமாற்றமளிக்கும் விடயமே.

5

ஐ.பி. எல்லில் விளையாடுவதற்கு வேகமும் உற்சாகமும் தேவை என கருதப்பட்ட நிலையில் தங்களது கிரிக்கெட் வாழ்வின் இறுதி தருணங்களில் உள்ள பல வீரர்கள் இம்முறை சோபித்தமை குறிப்பிடத்தக்க விடயம். பந்து வீச்சில் அனுபவம் கைகொடுத்தது. இந்த வருடம் அதிகளவு விக்கெட்களை வீழ்த்தியவர்களில் ஐவர் 30 வயதை கடந்தவர்கள். பிராவோ, மலிங்க, ஹர்பஜன்சிங், அஸீஸ் நேஹ்ரா மற்றும் இம்ரான் தாகிர். இவர்களில் அஸீஸ் நேஹ்ரா மற்றும் இம்ரான் தாகிர் ஆகிய இருவரும் 40 வயதை நெருங்கியவர்கள்.

9

இவ்வருட ஐ.பி.எல்.லில் சிறிய அளவிலான மேற்கிந்திய வீரர்களே விளையாடினார். ஆனால் அவர்கள் அற்புதமான பங்களிப்பை செய்தனர். 326 ஓட்டங்களை பெற்று,14 விக்கெட்களையும் வீழ்த்திய அன்ரூ ரசல் இவ்வருட ஐ.பிஎல்லின் மிகவும் பெறுமதியான வீரராக தெரிவுசெய்யப்பட்டார். இறுதிப்போட்டியில் அதிக ஓட்டங்களை பெற்ற லென்டில்சிம்மன்ஸ் இவ்வருடம் 540 ஓட்டங்களை பெற்றார். இவ்வருடம் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடம் இவரிற்கு. அதேபோன்று இவ்வருடம் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் டரன் பிராவோ 26. இவ்வருடம் அதிக ஓட்டங்களை பெற்றவர்களில் ஓருவர் கிறிஸ் கெயில்-, பஞ்சாப்பிற்கு எதிராக அவர் அற்புதமான இனிங்சை விளையாடினார். கிரான் பொலார்ட் 419 ஓட்டங்களை பெற்றார் இறுதிப்போட்டியில் அற்புமான சிறிய இனிங்சை விiளாடினார். டீவைன் ஸ்மித் கூட தனது முதற்பந்தில் விக்கெட்டை வீழ்த்தினார்-இறுதிப்போட்டியில்.இவ்வருடம் ஏமாற்றிய ஒரேயொரு மேற்கிந்திய வீரர் சுனில்நரைன். அவர் 8 விக்கெட்களை மாத்திரம் பெற்றார் . அவரது பந்துவீச்சு முறை குறித்து பல கேள்விகள் எழுந்தன.

10

ஓரு நாள்போட்டிகளை தனது அணிக்கு சார்பாக துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் முடிவிற்கு கொண்டுவரக்கூடிய என எதிர்பார்க்கப்பட்டவர் ஜேம்ஸ் போக்னர். எனினும் இம்முறை அவரும் ஏமாற்றினார். 11 இனிங்ஸ்களில் 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்- சராசரி 18. பந்து வீச்சிலும் அவர் சிறப்பாக செயற்படவில்லை. 53.25 என்ற சராசரியில் 9 விக்கெட்களை வீழ்த்தினார். ஓரு ஓவரிற்கு 9 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். அவருக்காக 1.7 மில்லியன் டொலர்களை வழங்கிய வேளை ராஜஸ்தான் இதனை எதிர்பார்த்திராது.

11

ரோகித் சர்மாவின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் மும்பாய் அணியினர் இரண்டாவது தடவை சம்பியனானர்கள். அதிர்ச்சியளிக்க கூடிய ஆரம்பத்திற்கு பின்னர் ரிக்கிபொன்டிங் அணியை சரியான பாதையில் வழிநடத்தினார். முன்னோக்கி நகர்வதற்கான உத்வேகத்தை பெற்ற பின்னர் அவர்கள் தடுக்கமுடியாதவர்களாக காணப்பட்டனர். மேற்கிந்திய அணியின் சிம்மன்சும், போலார்ட்டும் மிகச் சிறப்பாக விளையாடினர். மிச்செல் மக்கிலர்கன், ஹர்பஜன் சிங் மற்றும் நிகரற்ற லசித்மலிங்கா ஆகிய மூன்று அற்புதமான பந்துவீச்சாளர்கள் இருந்தனர். 21 வயது சுழற்பந்துவீச்சாளர் ஜகதீச சுச்சித்தினை இணைத்துக்கொண்டதும் அணிக்கு பலம் சேர்த்தது. அவர்களது வெற்றி என்பது ஓட்டு மொத்த அணியின் முயற்சிகாரணமாகவே உருவானது. பயிற்றுவிப்பாளர் ரிக்கிபொன்டிங் மற்றும் அணித்தலைவர் ரோகித் சர்மா இருவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

12

மூன்றாவது தடவையாக வெற்றிபெறும் சென்னையின் எதிர்பார்ப்பு இறுதிபோட்டியில் அணி ஓட்டுமொத்தமாக மோசமாக விiளாடியதால் தகர்ந்தது. மும்பாய் அணியின் 202 இருபதிற்கு இருபது போட்டிகளில் அதிகமானது. பந்து வீச்சில் தடுமாறிய பின்னர், துடுப்பபெடுத்தாடிய வேளை கிடைத்த தடுமாற்றகரமான ஆரம்பத்தின் பின்னர் அவர்கள் மீளவில்லை. பவர்பிளேயில் அவர்கள் 31 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்கள். அதன் பின்னர் அவர்களுக்கு வழியேதும் இருக்கவில்லை.அளவுக்கதிகமான ஓட்டங்களை பெற வேண்டியிருந்ததால் அவர்கள் எதிர்ப்பின்றி பணிந்தனர்.