செய்திகள்

2016ம் ஆண்டு பிள்ளைகளை முதலாம் தரத்துக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் வெளியாகின

அடுத்த வருடம் அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான  சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க  அதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜுலை 10ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு பெற்றோர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
தமது பிள்ளைகளை முதலாம் தரத்துக்கு அனுமதிக்கவுள்ள பெற்றோர் சுற்று நிருபத்தில் காணப்படும் விடயங்களை பின்பற்றி பிழையின்றி முறையாக விண்ணப்ப படிவத்தை நிரப்பி குறிப்பிட்ட தினத்துக்குள் தமது பிள்ளையை அனுமதிக்க விரும்பும் பாடசாலையின் பிரதானிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.