செய்திகள்

2020ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் – வடக்கில் மகாஜனா மாணவி முதலிடம்

2020ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடன் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்தார்.அத்துடன் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சந்திரகுமார் ஆர்வலன் மற்றும் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் மகிசன் இருவரும் தலா 195 புள்ளிகளைப் பெற்றிருந்தனர்.நேற்று நள்ளிரவு வெளியான தகவல்களின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி அஸ்வினியா ஜெயந்தன் 196 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருந்தார்.

அத்துடன், தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.இதற்கமைய, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு 162 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு 160 புள்ளிகள் வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், திருகோணமலை, பதுளை, பொலனறுவை ஆகிய மாவட்டங்களுக்கு 159 புள்ளிகளும் நுவரெலியா, மன்னார், இரத்தினபுரி, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 158 புள்ளிகளும் புத்தளம் மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு 155 புள்ளிகளும் வெட்டுப்புள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.பரீட்சைப் பெறுபேறுகளை கீழ்வரும் இணையத்தள முகவரிக்குச் சென்று பார்வையிடவும்.(15)

https://www.doenets.lk/examresults