செய்திகள்

2021 ஆம் ஆண்டு பாடசாலை இரண்டாம் தவணை விடுமுறை ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்தப்படும்

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுகின்றமையினால், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி முதல் மீள திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2021 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்தப்படும் எனவும் பாடத்திட்டத்தை உள்ளடக்கும் வகையில் விடுமுறைகள் குறைக்கப்பட்டுள்ளதாக இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)