செய்திகள்

ஜெனிவா கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்: இலங்கை மீது விசேட அவதானம்!

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் இன்று (13) ஆரம்பமாகவுள்ளது.ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.இந்த கூட்டத் தொடரின் ஆரம்ப நிகழ்வில் மனித உரிமைகள் ஆணையாளர் உரையற்றவுள்ளதுடன், இதன்போது அவர், இலங்கை தொடர்பான 46/1 தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் வாய்மூல அறிக்கையையும்  சமர்ப்பிக்கவுள்ளார்.

இவ்வேளையில் இலங்கை செயற்படுத்த தவறிய பொறிமுறைகள் தொடர்பில் அவர் கூடிய கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகின்றது.இதனால் இம்முறை ஜெனிவாவில் இலங்கைக்கு கடும் நெருக்குதல் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.ஆனால், எந்த சவாலுக்கு முகம்கொடுக்க தயார் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இலங்கை சர்வதேச நாடுகளை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.உலகளாவிய கொவிட் தொற்று நிலைமை காரணமாக இம்முறை கூட்டத்தொடரில் காணொளி மூலம் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர்  கலந்துகொள்ளவுள்ளார்.இலங்கை தொடர்பான உண்மை நிலைமையை இதன்போது அறிவிக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அந்த தீர்மானம் குறித்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பிலும் தனியாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு பங்காளிக்கட்சிகள் அடங்கலாக ஐந்து கட்சிகள் இணைந்து வேறொரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.-(3)