செய்திகள்

“3 ஆவது டோஸ் கொவிட் தடுப்பூசிகளையும் கொள்வனவு செய்யுங்கள்” : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை!

கொவிட் தடுப்பூசியின் 3 ஆவது டோஸ் செலுத்த வேண்டுமாயின் அதனை இப்போதே கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இன்று நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

சர்வதேச நாடுகள் பல மூன்றாவது டோஸ் தடுப்பூசிகளையும் கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளன.

அதன்படி நாமும் தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

-(3)