செய்திகள்

விபத்து – இருவர் உயிர் தப்பியுள்ளனர்

கினிகத்தேனை பிட்டவளை பகுதியிலிருந்து கினிகத்தேனை நகரம் வரை நோக்கி சென்ற கெப் ரக வாகனம் ஒன்று நேற்று  நள்ளிரவு 12.00 மணியளவில் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை கோவிலுக்கு அருகாமையில் அட்டனிலிருந்து நாவலப்பிட்டி சென்ற லொறி ஒன்றின் மீது மோதி அதன்பின் பிரதான வீதியை விட்டு விலகி 25 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் கெப் ரக வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட மற்றுமொருவர் வாகனத்திலிருந்து பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர்.

வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் சாரதி கெப் ரக வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணத்தினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC00578 DSC00582 DSC00589