செய்திகள்

35000 அமெரிக்க டொலர்களுடன் கட்டுநாயக்காவில் ஒருவர் கைது

சட்டவிரோதமாக முறையில் ஒருதொகை வெளிநாட்டு நாணயத்தாள்களை சிங்கப்புருக்கு கடத்த முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
29 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாகவும் அவரிடமிருந்து 35,000 அமெரிக்க டொலர்கள் மீட்கப்பட்டதாககவும் இவற்றின் பெறுமதி   47 இலட்சத்து 53,000 ரூபாவாகும் எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி காமினி  தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.