செய்திகள்

41இல் அடியெடுத்து வைக்கும் விஜய்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் நடிகர் விஜய், இன்று 41-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இவரது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் உள்ள சினிமா நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் தற்போது நடித்துள்ள ‘புலி’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் விஜய் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.